r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 9h ago
Kavithaigal பொறாமை
கண்ணாடி கோப்பையில்
குடிக்கிறாள் காப்பி
பொறாமை தான்
எனக்கந்த கோப்பையின் மீது
அவள் இதழ் எனும் கோப்பையை
பெற நான் செய்யும் முயற்சியில்
கண்ணாடி கோப்பைக்கு எளிதாக கிடைக்கிறதே
r/NaMuthukumarTamil • u/Slight_Voice_2826 • 5d ago
A small request to u/everyone
We do not endorse the use of AI-generated content in this community.
Please refrain from posting AI-generated images, artwork, writing, or any other AI-generated content here.
This page is a space for human creativity, originality, and individual expression.
Please respect the purpose of this community and avoid using AI to generate content for your posts.
Let's keep this space human-made. Thank you!
With love
Oozhi
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 9h ago
கண்ணாடி கோப்பையில்
குடிக்கிறாள் காப்பி
பொறாமை தான்
எனக்கந்த கோப்பையின் மீது
அவள் இதழ் எனும் கோப்பையை
பெற நான் செய்யும் முயற்சியில்
கண்ணாடி கோப்பைக்கு எளிதாக கிடைக்கிறதே
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 14h ago
பிரிவு என்பதை
வெறும் சொற்களாகத்தான்
இத்தனை வருடம்
எழுதியிருக்கிறேன்
நீ வந்து போன பிறகு தான்
சொற்கள் துடிக்க ஆரம்பிக்கிறது.
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 1d ago
எதற்கும் பேச தயங்காதவன்
தயங்கினான் முத்தம் கேட்க ...
உதடுகள் சேராமல் சண்டை போட
அவன் தயக்கத்தை பார்த்த
அவளோ "போடா டேய் 🤨"
பதில் வைத்திருந்தால்
ரெடியாக
r/NaMuthukumarTamil
•
u/patrickjane_47
•
1d ago
அவள், அவனை....
ஒருபோதும் அவன் மட்டும்தான் முக்கியம் என்று யாரிடமும் சொல்லியதில்லை.
அவனும் தான் முக்கியம் என்றே சொல்லியிருக்கிறாள்.
ஆனால்,
அவன், அவளை....
அவள் மட்டும் தான் முக்கியம் என்றே சொல்லியிருக்கிறானே தவிர
ஒருபோதும் அவளும் தான் முக்கியம் என்று சொல்லியதில்லை.
இதுவே அவன் அவளுக்கு கொடுக்கும் முன்னுரிமை.....
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 1d ago
உறங்கிய யாழின் நரம்பினை மீட்டி,
உன்விரல் பட்டதும் உள்ளம் சிலிர்த்தது,
இசையெனப் பொங்கிய
இனியதோர் உணர்வில்,
இமைகளும் மூட இதழ்கள் உறைந்தன!
மயங்கிய பொழுதில் மதியும் கரைய,
மறந்தே போனேன் என்னை நானே!
r/NaMuthukumarTamil • u/lodukku_paandi • 2d ago
கடலளவு அன்பென்று சொல்லிவிடுவது எளிது.
தாகமெடுத்த நேரத்தில் ஒரு குவளை நீராய் இருப்பதுதான் அன்பு.
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 2d ago
எரிகின்ரேன் விளக்காக
அவள் வேண்டி
விட்டு சென்ற பின்பும்
r/NaMuthukumarTamil • u/Naveen_laxman • 2d ago
நான் உன்னை மிஸ் பண்ணவே இல்லை.
என்னை மகிழ்ச்சிப்படுத்தும் தருணங்களோ, என்னை நெகிழ வைக்கும் நிமிடங்களோ ஏதாவது நடக்கும்போது, 'நீ கூட இருந்தா நல்லா இருந்திருக்கும், நீ இல்லையே'ன்னு உன்னை மிஸ் பண்ணலாம். ஆனா உன்னைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு அப்படி எதுவுமே நடக்கலையே. அப்புறம் எப்படி மிஸ் பண்ணேன்னு சொல்ல முடியும்? 🥺
r/NaMuthukumarTamil
•
u/manikandan_n95
•
3d ago
தெரியும் மனதிற்கு
அவள் தன்னவள் அல்ல என்று
தெரிந்தே தேடுகிறது அவள் குரலை
எங்கும்.
- மீளா வலி
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 3d ago
மேடையில் யாரோ பேச
அவள் உறங்கி இருப்பாளா
என்ற எண்ணம்
அருகில் இருந்த நண்பரின்
செல்போனில்
அவ போய் ஆறு மாசம்
ஆச்சு என கேட்க
சிரித்தான்
r/NaMuthukumarTamil
•
u/Dangerous-Luck-3973
•
3d ago
ஒருநாள் என் வானத்திலும் ஒரு நிலா உதிக்கும்,
பெயர் தெரியாமலே என் கவிதைகளில் இடம் பிடிக்கும்.
இன்னும் சந்திக்காத உன் சிரிப்பை மனம் தேடுகிறது,
எந்த ஜென்மத்தின் தொடர்ச்சியோ இந்தக் காத்திருப்பு,
காதல் தொடங்கும் முன்பே உனக்காக ஒரு இதயம் காத்திருக்கிறது…..!
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 3d ago
நான் இங்கு
உடைந்துவிட்டது தெரியாமலேயே
என் கண்ணாடி
வேறொருவரிடம்
சிரித்து பேசிக் கொண்டிருந்தது!
r/NaMuthukumarTamil • u/TrafficNo2332 • 4d ago
ஏன் அழைத்தாய்
என்று நீ கேட்காத வரை
ஏன் அழைத்தேன் என்று
நானும் சொல்லாத வரை
அது என் வாழ்க்கையின்
வசந்த காலம்!
I tried something different from how I usually write, pls let me know how it is in the comments!
நன்றிகள்!!
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 4d ago
அவள் பாதம் பற்றி
அவள் நடக்கும் அழகை
கண்டு தான் பெண்டுலம்
கண்டுபிடிக்கப்பட்டதோ
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 5d ago
தொன்னூறில் அவுட் ஆனவன்
அந்தப் பந்தை
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பான்:
"அந்த ஒரு ஷாட் வேறாக ஆடியிருந்தால்."
அவளை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் அதையே செய்கிறேன்.
நொடி நொடியாக
நொடிகிறேன்.
r/NaMuthukumarTamil
•
u/dpt19
•
5d ago
அம்மாவும் அப்பாவும்
தங்களிடம் இருந்ததையெல்லாம் தந்தார்கள்.
அதன் அளவை
நான் அப்பாவான பிறகுதான் அறிந்தேன்.
ஒருமுறை பௌர்ணமி எப்போது என்று மறந்துவிட்டேன்.
அம்மாவிடம் கேட்டேன்:
“பௌர்ணமி எப்போது?”
அவள் முகம் முழுக்க ஒளிர்ந்த மகிழ்ச்சிப் புன்னகையுடன்
தேதியைச் சொன்னாள்.
ஒவ்வொரு மாதமும் நிலா முழுமையாவதை
அவள் கவனித்துவந்தாள் என்பது
அப்போது எனக்குத் தெரியவில்லை.
அவள் இல்லாதபிறகுதான்
அந்த நிலவைப் பார்க்கத் தொடங்கினேன்—
அவள் பார்த்த கண்களால்.
அவள் புத்தகங்கள் படித்தாள்.
தனக்கு எவ்வளவு தெரியும் என்று சொல்லவில்லை.
நாங்கள் நடந்தோம்—
பாதையை நாங்களே கண்டுபிடித்ததாக நினைத்தோம்.
இப்போது என் மகனும் அப்படித்தான் நடக்கிறான்.
சில நேரம்,
அவனுக்குப் பின்னால்
நான் அமைதியாக நடக்கிறேன்.
அப்பா என் சிறிய வெற்றிகளையும் கேட்டார்:
“மறுபடியும் சொல்லு.
யார் என்ன சொன்னார்கள்?
அப்புறம் என்ன நடந்தது?”
அப்போது எரிச்சலாக இருந்தது.
இப்போது என் மகன்
ஒரு சிறிய விஷயத்தைச் சொன்னாலும்,
“அப்புறம்?” என்று கேட்கிறேன்.
அன்பு சில கதைகளை
மறுபடியும் கேட்கச் செய்கிறது.
இரண்டு வேலைகள்.
பதினாறு மணி நேரம்.
அப்பா சோர்வைப் பற்றிப் பேசவில்லை.
அம்மா எனக்குப் பிடித்ததைச் சமைத்து,
“நான் சாப்பிட்டுவிட்டேன்,” என்பாள்.
அந்தச் சொல்லின் உண்மை
எனக்குப் பசியிருந்த காலத்தில் தெரியவில்லை.
இப்போது என் தட்டில் உணவு வைக்கும்போது
அவள் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அவர்கள் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்றதில்லை.
“சாப்பிட்டாயா?” என்றார்கள்.
“பத்திரமாகப் போ.”
“வீடு சேர்ந்ததும் சொல்லு.”
தெருவின் முடிவுவரை
அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நான் திரும்பிப் பார்க்கவில்லை.
தன் பிள்ளைகளுக்காக அம்மா வேண்டிக்கொண்டது—
கூரை, உணவு, உடை, உடல்நலம்.
அவளுக்காக
அவள் கடைசியாகத்தான் வேண்டினாள்.
அவள் போனபிறகு
என் கல்லூரிக் கவிதைகள் கிடைத்தன.
அவள் அவற்றை
ஒரு நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்தாள்.
நான் எழுதியதை மறந்துவிட்டேன்.
அதை அவள் மறக்கவில்லை.
அப்பா என் சான்றிதழ்களையும்
சின்னச் சின்னப் பொருட்களையும் வைத்திருந்தார்.
நான் மறந்தவற்றை
அவர் மறக்கவில்லை.
இப்போது என் மகனின் காலடி ஓசை கேட்டால்
கதவை நோக்கிப் பார்க்கிறேன்.
அவன் உள்ளே வந்ததும்,
என் வாயிலிருந்து அதே கேள்வி வருகிறது:
“சாப்பிட்டாயா?”
அந்தக் கேள்வி
அம்மாவிடமிருந்து வந்தது.
அப்பாவிடமும் இருந்தது.
இப்போது என்னிடம் இருக்கிறது.
வளர்ந்த கலை மாறவில்லை.
r/NaMuthukumarTamil • u/Old-Mirror-3469 • 5d ago
"என்ன வரம் வேண்டும்?"
என்றார் கடவுள்.
"அதுகூடத் தெரியாத நீர் என்ன கடவுள்?"
- கவிஞர் நீலமணி
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 6d ago
அவள் என்னைத் திட்டும்போது
சுருங்கும் புருவம்,
நகையாடும்போது
கன்னத்தில் விழும் குழி.
இதைப் பார்க்கத்தான்
நான் அடிக்கடி தப்பு செய்கிறேன்.
அவள் திட்டிய பிறகு நான் சொல்வது
ஒரே ஒரு சொல்:
"சரி, அழகம்மா."
r/NaMuthukumarTamil
•
u/manikandan_n95
•
6d ago
Song which I tried.
r/NaMuthukumarTamil • u/Maverick_charm98 • 7d ago
சத்தம் இல்லாமல் என்னுள் நுழைந்தாய், சலனமற்ற என் மனதைக் கலைத்தாய். காலங்கள் கடந்து போகும் வேளையிலும், கனவுகளில் மட்டும் நீ நிரந்தரமானாய்.
விழிகள் பேசும் மொழியில், வார்த்தைகள் தோற்றுப் போகின்றன. நீ அருகில் இருக்கும் நொடியில், வாழ்க்கை முழுமையாய் மாறுகிறது.
இருளில் வழி தேடும் எனக்கு, இதமான வெளிச்சமாய் வந்தாய். கரையாத நினைவுகளாய், கண்களுக்குள் கரைந்து போனாய்.
என் மூச்சின் ஒவ்வொரு அசைவிலும், உன் பெயர் மௌனமாய் ஒலிக்கிறது. உன்னோடு வாழும் ஒரு நொடியும், யுகங்களாய் நீள்கிறது💖💖
r/NaMuthukumarTamil • u/Maverick_charm98 • 7d ago
மலையின் வளைவுகளில் நீளும் சாலை போல, என் மனதின் எல்லா வழிகளும் உன்னிடமே வந்து முடிகின்றன. இரவு முழுவதும் தூங்காமல் தவிக்கும் என் சிந்தனைக்கு, உன் பெயர் ஒரு விடியலின் காபி போல புத்துணர்ச்சி தருகிறது. சிதறிக் கிடக்கும் என் எண்ணங்களை, ஒரு ஒற்றை வரியில் கோர்த்து விடுகிறாய் நீ. வெறும் காகிதமாய் கிடந்த என் நாட்களுக்கு, உன் வருகைதான் முதல் அத்தியாயம். மௌனமாய் இருக்கும் ஒரு பக்கத்தை நீ திருப்பிப் பார்க்கும்போதுதான், அது ஒரு முழுமையான கவிதையாக மாறுகிறது. காலம் எத்தனை தூரம் ஓடினாலும், என் கதையின் முடிவு எப்போதும் நீயாகத்தான் இருக்கிறாய்.
r/NaMuthukumarTamil • u/dan_da_nakkaa • 7d ago
காற்றடித்தும்
என் மூச்சு
அவள் பக்கமிருந்தும்
செல்லவில்லை அவளிடம்
ஏனோ
அவள் இதய கவசத்தை
இரக்கினால் நான்
இதயத்தை
நிரப்பிடுவேன் என்ற
பயமோ