r/TamilBooks • • Nov 21 '25

நவம்பர்: தமிழ் புத்தகம் விமர்சன கூட்டம்

10 Upvotes

வணக்கம் தமிழ் வாசகர்களே!

இந்த மாதத்தில் நீங்கள் படித்த சிறந்த தமிழ் புத்தகம் எது?

உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் புத்தக பரிந்துரைகளை கீழே பகிரவும்.


r/TamilBooks • • Aug 19 '20

r/TamilBooks Lounge

3 Upvotes

A place for members of r/TamilBooks to chat with each other


r/TamilBooks • • 2h ago

Buddha’s Well and Jacob’s Well: Two distinct narratives, and the same girl at a Western Ghats well

Thumbnail reddit.com
1 Upvotes

r/TamilBooks • • 4h ago

Sometimes I feel whats the point of reading literature but then I invariably end up seeking another book !

1 Upvotes

Has this happened to you ?


r/TamilBooks • • 9h ago

Suggestions of writers books which people either love or hate extremes !

2 Upvotes

Thanks!


r/TamilBooks • • 10h ago

What are some of the iconic songs that represent the Marudham Thinai in Sangam Literature?

Thumbnail reddit.com
1 Upvotes

r/TamilBooks • • 1d ago

முற்றும் மோனை காதல் கவிதை

0 Upvotes

மூச்சில் முளைத்து முகத்தில் முத்தமிட்டு முகவரியை முற்றுகையிட்டாள் முல்லையவள்.


r/TamilBooks • • 2d ago

காடு - ஜெயமோகன்

Post image
32 Upvotes

Lines from Kaadu,

நினைவுகூர்ந்து அந்த மிளாவின் காலடியைப் பார்த்தேன். மண் மூடியிருந்தது. கால்களால் மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். எந்த இடம் என்று சரியாக அடையாளம் காண முடியவில்லை.

“என்ன தேடுதீரு பாட்டா?” என்றான் மேலே நின்றவன்.

‘ஒண்ணுமில்லை” என்றேன், சிறுநீர் கழிப்பவன்போல வேட்டியைத் தூக்கியபடி.

அவன் பார்வையைத் திருப்பியதும் மீண்டும் தேடினேன். கண்டுபிடிக்க முடியவில்லை. உட்கார்ந்து சிறுநீர் கழித்தேன். புரோஸ் டேட் பிரச்சினை. சிறிது நேரம் பிடிக்கும்.

பெருமூச்சுடன் எழுந்து உடையைச் சரி செய்து சற்றுத் தள்ளி நின்றேன். நம்பிக்கையின்றி மீண்டும் மண்ணைத் தள்ளியபோது அது தெரிந்தது. உடல் பதற நன்றாகத் தோண்டினேன். கான்கிரீட் பரப்பில் அந்த குளம்புச் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன. செம்மண் படிந்திருந்தது. கட்டைவிரலால் தூண்டியபோது துலங்கி வந்தது. 

அதை நடுங்கும் தலையுடன் பார்த்து நின்றேன். அழுகை வந்து தொண்டை இறுகியது. அந்த ஊரில் யாருக்கேனும் அது அங்கிருப்பது தெரியுமா? வாய்ப்பே இல்லை. அதைக் கட்டிய எவரும் உயிருடனிருக்க நியாயமில்லை. எவராவது அதைப் பார்த்தால்கூட அது ஒரு மிளாவின் குளம்பு என்ற கண்டறியச் சாத்தியமில்லை. மிளாக்கள் இங்கு எங்குமே இல்லை. பேச்சிப்பாறை மலைகளில் கூட அவை மிகவும் குறைவு. இந்த ஊரில் எவருமே ஒரு மிளாவைப் பார்த்திருக்க மாட்டார்கள். கேள்விப்படாதவர்களும்கூட இருக்கலாம்.

ஆனால் யாருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது அங்கே இருக்கிறது. அதை எவரும் எதுவும் செய்துவிடமுடியாது. அந்த மிளா நீர் தேடி வந்த நாள் எனக்கு ஒவ்வொரு துல்லியத்துடனும் நினைவுக்கு வந்தது. யாரோ இடம் சொல்லி அறிவுறுத்தி அனுப்பியதுபோல அது வந்தது என்று அப்போது பட்டது. அதன் பார்வையை நினைவு கூர்ந்தபோது அக்கண்களை ஊடுருவி அதில் நிரம்பியிருந்த அதன் மனதை அறிய முடிவது போலிருந்தது. பெரு மூச்சுடன் படிகளில் ஏறி சாலைக்கு வந்தேன். வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அத்தகைய வெயில் முன்பெல்லாம் சமவெளி களில் தான் அடிக்கும்.

Book:

https://www.amazon.in/Kaadu-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-Tamil-Jeyamohan-ebook/dp/B0CCPQF8PD


r/TamilBooks • • 2d ago

வணக்கம் மக்களே! ஒரு reading app build பண்ணிருக்கேன். கொஞ்சம் different-ஆ இருக்கும்.

27 Upvotes

சில நேரம் ஒரு book-ல ஒரு நல்ல passage வரும்போது, அதை சீக்கிரம் படிச்சு முடிக்கணும்னு தோணாது.

கொஞ்சம் slow-ஆ படிக்கணும், அந்த words-ஐ கொஞ்ச நேரம் enjoy பண்ணணும்னு தோணும்.

அந்த idea-ல தான் Soll (சோல்) ன்னு இந்த app-ஐ build பண்ண ஆரம்பிச்சேன்.

சோல்-ல normal-ஆ page-ஐ scroll பண்ணி படிக்காம, Focus Modes use பண்ணி ஒரு நேரத்துல ஒரு word-ஆ screen-ல காட்டும்.

Reading position கிட்டத்தட்ட ஒரே இடத்துல இருக்கும். அதனால் screen முழுக்க கண்களை move பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதில்லை.

முதல்ல கொஞ்சம் weird-ஆ இருக்கும் 😄
ஆனா கொஞ்ச நேரம் use பண்ணிப் பார்த்தா, reading experience கொஞ்சம் different-ஆ feel ஆகும்.

Phone-ல நிறைய படிக்கிறவங்க இங்க இருந்தா, ஒரு தடவை try பண்ணிப் பாருங்க.

உங்களுக்கு எப்படி இருக்கு-ன்னு feedback கொடுத்தா ரொம்ப useful-ஆ இருக்கும்.

https://play.google.com/store/apps/details?id=com.muraimai.soll


r/TamilBooks • • 1d ago

நான் எழுதிய முதல் தமிழ் புத்தகம்: “பெண்ணே, உனக்கான வாழ்க்கையும் நீ தொலைத்த அடையாளமும்!” (Free on Amazon Kindle for the next 2 days)

Thumbnail
mybook.to
3 Upvotes

வணக்கம் நண்பர்களே,

ஒரு பெண்ணின் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் நிறைவேறாத கனவுகள், "நாலு பேர் என்ன சொல்வார்கள்?" என்ற சமூக அழுத்தம், திருமணத்திற்குப் பிறகான தனிப்பட்ட அடையாளம், பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சமத்துவமான வளர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து “பெண்ணே, உனக்கான வாழ்க்கையும் நீ தொலைத்த அடையாளமும்!” என்ற தமிழ் ஈ-புக் எழுதியுள்ளேன்.

இது ஆண்களுக்கு எதிரான புத்தகம் அல்ல; ஒரு பெண்ணை அவளுடைய பொறுப்புகளுக்கு அப்பால் ஒரு தனி மனிதராகப் புரிந்துகொள்ளத் தூண்டும் ஒரு சிறிய முயற்சி.

அடுத்த 2 நாட்களுக்கு அமேசான் கிண்டிலில் (Amazon Kindle) இந்தப் புத்தகம் முற்றிலும் இலவசமாகக் (Free) கிடைக்கிறது.

புத்தகத்தின் லிங்க்: https://mybook.to/isEX

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது டவுன்லோட் செய்து படித்துப் பாருங்கள். உங்களின் நேர்மையான விமர்சனங்களும் (Reviews), கருத்துக்களும் ஒரு புதிய எழுத்தாளராக எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். நன்றி!


r/TamilBooks • • 1d ago

Help me find this

Post image
1 Upvotes

r/TamilBooks • • 2d ago

சிறுகதை - வஸ்து

2 Upvotes

அன்று இரவு பௌர்ணமியாக இருந்தாலும் மேகங்கள் மூடியிருந்ததால் வானம் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பியிருந்தது. வீதி விளக்கின் தயவுடன் இரண்டு இளைஞர்கள் தங்கள் இருப்பிடம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“நவீனு, இன்னைக்கு பொட்டனம் போடறோம்.”

“போட்டறளாங்கரியா.”

“இப்ப போடாம எந்த வயசுல போடறது. பணம் சேர்த்திட்டல்ல.”

“இல்லடா, ஜனா. அதுக்குனு சேர்த்து வச்சதுல கொஞ்சம் குறையுது.”

“பணம் இல்லாம வஸ்து தரமாட்டாங்கடா. வேற பணம் இல்லையா?”

“அப்பா அடுத்த மாசம் மெஸ் பீசுக்கு கொடுத்த பணம் இருக்கு!”

“அப்பறென்ன! அதை எடுத்துரு. நானே காலேஜ் பீசுக்கு வச்சிருக்கிற பணத்தில தான் எடுக்கப்போறேன்.”

“அடப்பாவி!”

“விடுடா! அதான் இப்ப சூப்பர் மார்க்கெட்ல பார்ட் டைம்மா வேலைக்கு சேர்த்திருக்கோமே! அந்த பணத்தை வச்சு சமாளிச்சுக்கலாம்.”

“சரியா வருமா.”

“வரும்டா.”

அவர்கள் பேசிக்கொண்டே ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

“பத்து மணிக்கு, நம்ம திவாகர் அவனோட பிரண்டோட கார் எடுத்துட்டு இங்கே வறேனு சொன்னான். அவனோடவே போயிக்கலாம். ஹ ஹ அதுதான் சேஃப்.”

“அப்படியா !  இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வேலை பார்த்திட்டு வந்ததில ரொம்ப அசதியா இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன்”.

“டேய்! அப்படியே தூங்கிடாத.”

“சரிடா. ஒருவேளை தூங்கிட்டா எழுப்பு.”

“சரி, நான் போன் பேசிட்டு வந்திடறேன்.” என்று சொல்லி கைபேசியை எடுத்தபடியே வெளியே நின்றுவிட்டான். ஜனா.

நவீன், அறையைத் திறந்து உள்ளே சென்று, மேஜேயில் இருந்த திருவள்ளுவர் படத்திற்கு அருகே தன் கைபேசியை வைத்துவிட்டு, “அப்பாடா” என்ற படியே படுக்கையில் படுத்தான்.

சிறிது நேரம் கழித்து, “நவீனு எழுந்திரிடா வஸ்து வாங்க போலாம். திவாகர் வந்திட்டான். சீக்கிரம்” என எழுப்பினான் ஜனா.

அறக்கப் பறக்க எழுந்து கிளம்பி போனை எடுக்கச் சென்றான். திருவள்ளுவர் படத்திற்கு அடியே தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்னும் குரல் எழுதியிருந்ததைப் பார்த்தான்.

பிறகு திரும்பி “ஜனா, வஸ்து தப்பில்லையா?”

“நவீனு, எப்பாவது ஒரு தடவை பண்ணா தப்பில்லை. தொடர்ந்து பண்ணாத்தான் தப்பு. பார்த்துக்கலாம் வாடா. மறக்காம பணத்தை எடுத்துக்கோ.”

“ம்ம்.”

இருவரும் அவசரமாகவும் அலாதியான பிரியத்துடனும் சற்றே பயத்துடனும் திவாகரின் காரில் ஏறினார்கள்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மாடிக்கட்டிட காலணிக்கு அருகே மரத்திற்கு அடியே சென்று கார் நின்றது. தொலைவில் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் லைட்டை அவர்களின் காருக்கு எதிர்புறமாக அடித்தபடி நின்றது. அவன் தன் தலைக்கவசத்தை கழட்டாமல் நின்றபடி, லைட்டில் டிம்மு டிப்பு அடித்தான்.

“அவன்தானு நினைக்கிறேன். காசை கொடுடா.” என்றான் ஜனா.

“இந்தாடா...” என நவீன் தன் காசை அவனிடத்தே கொடுக்கும் போது அப்பாவின் முகம் வந்து போனது.

நவீன் மட்டும் காருக்குள்ளே கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருக்க, ஜனாவும் திவகாரும் அந்த வண்டிக்காரனிடம் சென்று ஏதோ பேசி பணத்தை கொடுக்க, அவன் சிறிய பொட்டலத்தை கொடுத்தான். அதை சட்டென்று வாங்கி தன் சட்டை பாக்கெட்டுக்குள் போட்டு விட்டு, பத்து வினாடியில் பல்லைக் காட்டியபடி “கிடைச்சிருச்சு...” என்று உற்சாக கூச்சலுடன் காருக்குள் வந்தான் ஜனா.

அடுத்த வினாடியில் திவாகரும் வந்து காரை விருட்டென்று எடுத்தான்.

“டேய் காட்டு, பார்க்கலாம்.” என்றான் நவீன்.

“இரு.” என்றபடி பொட்டனத்தை எடுத்துப் பிரித்தான். அதை பார்த்தவுடனே, பயமும் சந்தோசமும் பொங்கிக் கொண்டு வந்தன அவர்களுக்கு.

“நவீனு, இப்பவே போட்டறலாம் டா.”

“டேய், ரூம்முக்குப் போய் போட்டுக்கலாம் டா.”

“டேய், அங்க போன, வாசனை அடிச்சா. எல்லாருக்கும் தெரிஞ்சுபோயிடும். அப்புறம் பங்குக்கு வருவானுங்கடா.”

“டேய், வெளியில போலிஸ் கீது பார்த்திட்டா?”

“அதெல்லாம் பார்க்கமாட்டாங்கடா. நீ பயந்து சாவாத. டேய் திவாகர் உனக்கு ஓகே தானா.”

“எனக்கு டபுள் ஓகே.”

“அப்ப! யாரும் வராத இடமா பார்த்து வண்டிய ஓரங்கட்டு.”

அவன் சொன்னது போலவே, அடுக்கு மாடி வீடு குடியிருப்பின் ஒரு புறத்தில் அமைந்திருந்த ஆள் நடமாட்டம் இல்லாத காலி மனைப்பகுதிகளுக்கு அருகே வண்டியை அவசரமாக நிறுத்தினான்.

அடுத்த சில நிமிசத்தில் காருக்குள்ளே புகை மண்டலம் சூழ்ந்தது. அவர்களுக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது.

“டேய் நவீனு, இந்த மாதிரி தினமும் அடிக்கணும்.”

“தினமும் அடிக்க காசில்லையே மச்சி.”

“அதான், நாம்ப சூப்பர் மார்க்கெட்ல சேர்ந்திருக்கோம்ல.”

“தினமும் எப்படிடா பணம் தருவாங்க.  கல்லாலலையா கைவக்க முடியும்.”

“நவீனு, சூப்பரான யோசனைடா. கல்லாவுல கை வச்சிருவோம்.”

“அடப்பாவி!”

“மாட்டிக்கிட்டா. சங்கு.”

“சங்கப் பார்க்காதா சரக்கப்பாருடா.”

“சரி, அந்த காசும் பத்தலனா?”

“அப்ப காசை திவா தருவான். இல்லை மச்சி.”

“கண்டிப்பா. இந்த காரை வித்தாவது அடிக்கலாம்டா.”

“திவா மாதிரி. பாசிட்டிவா பேசுடா.”

“டேய், திவா இது உன்னோட காராடா.. சொல்லவேயில்லை.”

“இல்லை. என் நண்பனோட காரு.”

“அப்புறம் எப்படிடா..”

“ஆமால்ல. அப்ப அவனை வித்தாவது நம்ப அடிப்போம்டா.”

“சூப்பர் சூப்பர் மச்சி. எப்படி நம்ப பைய, அதான் திவா. என் நண்பன்டா..” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும் குடியிருப்புக்கும் அவர்களின் காருக்கும் இடையே வந்து நின்றனர். “இங்கேயே எதுக்கு நிறுத்த சொன்ன, இன்னும் கொஞ்ச தூரம் போய் இறக்கி விட்டிருப்பேன்ல.” என்றான் அவன்.

“வேண்டாம். தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா அப்போ பிரச்சனையாயிரும்.”

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த நவீன், “டேய் மச்சி, அவளைப் பார்த்தால், என்னோட எக்ஸ் கோகிலா மாதிரியே இருக்குடா.” என்றான் உணர்ச்சி வசத்துடன்.

ஜனா கண்களை தேய்த்து உற்றுப் பார்த்துவிட்டு, “இல்லைடா, அது வேறயாரோ! அவதான் உனக்கு டிமிக்கி கொடுத்துட்டு வேற ஊருக்குப் போயிட்டாளே! அவளா இருக்காது.” என்றான்.

“இல்லை மச்சி, அவதான். என்னை வெறுப்பேத்ததான் இப்படி எவன்கூடவே வந்து நிக்கிறா.” என்று கண்களை கசக்கியபடியே அழுதான்.

“பீலிங்கஸ் ஆவாத, இங்க வா. நண்பன் நானிருக்கேன்ல” என்று அவனோடு தோளில் கைபோடச் சென்றவனை, கையை விலக்கிவிட்டான்.

“இப்ப அவளை என்ன பண்ணப்போறேன்பாரு!” என்று கதவை திறந்து கொண்டு தள்ளாடியபடியே அவர்களிடம் சென்றான். “போகாதே, போகாதே” என்று எத்தனை முறை ஜனா கூப்பிட்டும் கேட்கவில்லை.

“ஏய், கோகிலா, இங்க எவன் கூடடி சுத்திகிட்டு இருக்கிற” என்றான்.

“ஹலோ, இவங்க பேரு கோகிலா இல்ல.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “ நீ சீக்கிரம் கிளம்பு.” என்றான் அந்த இளைஞன் அந்த பெண்ணிடத்தில்.

“பேர, மாத்தி சொன்னா. எங்களுக்குத் தெரியாதா? இவ கோகிலா தான்.” என்றான் நவீன்.

“இவன் யாருனு உனக்குத் தெரியுமா?” என்றான் அந்த இளைஞன் அவளிடத்தே.

“டேய், இவன் தான் ஏதோ போதையை போட்டு லூசு மாதிரி உலறிட்டு இருக்கிறான். அவன் சொல்றானு நீ கேட்டுட்டு இருக்கிற. நீ நாளைக்கு வா உன்ன வச்சிக்கிறேன்.”

“அடிப்பாவி, என் முன்னாடியே அவனை வச்சிக்கிறேனு சொல்றியா. உன்னை” என்று அவள் கையைப் பிடிக்கச் சென்றான்.

உடனே அந்த இளைஞன், அவனைத் தள்ளிவிட, தடுமாறி கீழே விழுந்தான். பின்னர், திரும்பி அப்பெண்ணிடம், “நீ சீக்கிரம் கிளம்பு.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவன் காதில் பலார் என்று ஒரு அரையை விட்டான் ஜனா. அந்த இளைஞன் அப்படியே தடுமாறி கீழே விழுந்தான். “என் நண்பனை தள்ளி விடறயா” என்றான்.

உடனே அந்த பெண், “சதீஸ், சதீஸ், உனக்கு ஒன்னும் ஆகலையே!.” என்று கீழே விழுத்தவனை தூக்கிவிடச் சென்றாள்.

“நான் கீழே விழுந்து கிடக்கறேன். என்னை தூக்காம அவனைத் தூக்க வரியா.” என்று வேகமாக எழுந்து அவள் தலையைப் பிடித்து இழுத்தான் நவீன்.

கீழே கிடந்த இளைஞன் நவீனின் காலைப் பிடித்து இழுக்க மீண்டும் கீழே விழுந்து மண்ணைக் கவ்வினான். அந்த பெண்ணும் அவன் இழுத்ததால் கீழே விழுந்தாள்.

“என் நண்பனை மறுபடியும் கீழே தள்ளுறியா” என்று சொன்னபடி, அந்த இளைஞனை வயிற்றில் எட்டி எட்டி மிதித்தான் ஜனா. அந்த இளைஞனும் அவனது ஊன்றிக் கொண்டிருந்த காலை உதைக்க, அவனும் தடுமாறி கீழே விழுந்தான்.

காருக்குள் இருந்து திவாகர், பேம் பேம்னு ஆரன் அடித்து, தலையை வெளியே நீட்டியபடி, “வாங்கடா சீக்கிரம்” என்றான் எதிரே வரும் வண்டியைப் பார்த்தபடி.

நீலம் சிவப்பு விளக்குகள் ஒளிர போலிஸ் ரோந்து வாகனம் வந்து கொண்டிருந்தது. உடனே, நவீனும் ஜனாவும் அவசரமாக எழுந்து அவர்களின் வண்டியை நோக்கி ஓடினார்கள்.

“உங்க இரண்டு பேரையும் இன்னொரு நாள் வச்சிக்கறேன்.” என்று கத்திவிட்டு காருக்குள் ஏறி உட்கார்ந்து “கிளம்புடா” என்றான் நவீன். ஜனாவும் வந்து அமர்ந்து கொண்டு, “சீக்கிரம்” என்றான். திவாகர் வண்டியை அலசியபடியே திருப்பினான்.

போலிஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய காவலர்கள், கீழே கிடந்தவர்களை தூக்கி விட்டனர்.

திவாகர் காரை படுவேகமாக செலுத்தினான். நவீனும், ஜனாவும் அவ்வப்போது பின்னால் திரும்பி போலிஸ் வாகனம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு, “சீக்கிரம் சீக்கிரம்.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகள் படபடத்தது, வியர்வை ஊற்றித் தள்ளியது.

பின்னால், போலிஸ் சைரன் அடித்தபடியே நீல சிவப்பு ஒளியை அடித்துக் கொண்டு வாகனம் வருவதைப் பார்த்தவுடனே, உடல் நடுங்கியது அவர்களுக்கு. “சீக்கிரம் போடா திவா.” என்று கத்தினார்கள்.

திவாகர், தன் கண்களை சுருக்கி உற்றுப் பார்த்தபடியே வண்டியை ஓட்டிகொண்டிருக்க, எதிரே ஹைபீம் போட்டுக்கொண்டு ஒரு வாகனம் வரவே, அவன் கண்கள் கூச, லேசாக இடது புறம் திருப்ப, புளியமரத்தை நோக்கி வண்டி பாய்ந்தது.

 

உ மணிகண்டன்


r/TamilBooks • • 2d ago

Today's Reading Session

Thumbnail gallery
3 Upvotes

r/TamilBooks • • 2d ago

அன்பின் கிறுக்கல்கள்

Thumbnail gallery
4 Upvotes

r/TamilBooks • • 2d ago

Yaarukaga azhuthan

1 Upvotes

What was your take on the ending of this book.. who did soseph cry for


r/TamilBooks • • 2d ago

சிறுகதை - வஸ்து

Thumbnail reddit.com
1 Upvotes

r/TamilBooks • • 3d ago

சிறுகதை - நெரிசல்

Thumbnail reddit.com
2 Upvotes

r/TamilBooks • • 3d ago

Shout out for the site: https://oldtamilpoetry.com/

7 Upvotes

(Not associated with the Author anyways, just a follower)

For those interested in Old Tamil Poetry (even if you don't know Tamil) , this is a very good site to follow, you can also follow on Twitter at https://x.com/OldTamilPoetry

His translations are excellent and often insightful.

Here is an example but there are plenty others he covers.

Kurunthokai 126

My friend! Blind to charms of youth,
he went away lured by wealth;
while I worry “He isn’t back yet; where’s he?”,
fragrant jasmine creepers in these woods
watered by cool monsoon rains laugh at me
with their row of buds as sparkling teeth.

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரா ரெவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.

“My friend! Youth is a brief joyful period of one’s life. But he was lured away by wealth and left me here in the prime of my youth. The rainy season has started but he hasn’t come back yet. While I worry about his whereabouts, the fragrant jasmine creeper in these woods has started flowering in cool monsoon rains. The row of jasmine buds seem to be laughing at me mockingly like a row of sparkling teeth.”

The woods are mocking at her because their paramour, the rain, has arrived and nourished them, while her lover hasn’t come yet to meet her. So she feels that the row of jasmine buds are laughing at her. Jasmine buds as metaphor for sparkling teeth is oft repeated in Tamil poetry.

இளமை – Youth
பாரார் – without looking at
வளம் – wealth
நசை – desire / lure
எவணரோ – where is he
பெயல் – rain
நறுந்தண் – cool fragrant
கார் – monsoon
புறம் – forest/ woods
பூங் கொடி – flowering creeper
முல்லை – jasmine
தொகு முகை – row of buds
இலங்கு – shining / sparkling
எயிறு – teeth
நகும் – laugh


r/TamilBooks • • 3d ago

விண்ணுலகம் சென்ற கண்ணகி

Thumbnail
youtu.be
1 Upvotes

r/TamilBooks • • 3d ago

வெள்ளப்பெருக்கு காரணமாக அழிந்த பழைய குமரிக் கண்டம், தமிழ் நாகரிகம்,தமிழ் வரலாறு, மறைந்த தமிழ்த் தொன்மை, வெள்ளப்பெருக்கு, சங்க இலக்கியம், தமிழர்களின் தொன்மை, மரபு, வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான தகவல்களை எளிய முறையில் பகிர்கிறோம்.தற்கபூர்வமாக ஆரோக்கியமாக காய்தல் உவப்பு இன்றி விவாதிப்போம் வாருங்கள்..

Thumbnail reddit.com
1 Upvotes

r/TamilBooks • • 3d ago

முற்றும் மோனை கவிதை

Thumbnail reddit.com
1 Upvotes

அழகு ஆண்மையா, அறிவு ஆண்மையா?

ஆவேசம் ஆண்மையா, அன்பு ஆண்மையா?

அதிகாரம் ஆண்மையா, அரவணைப்பு ஆண்மையா?

அழகும், ஆவேசமும் அதிகாரமும் அறிவிலா ஆண்கள் அறிந்து

அளித்த ஆண்மை ஆயினும், அறிவும், அன்பும், அரவணைப்புமே

ஆண்டவன் அள்ளி அளித்த அசல் ஆண்மையாகும்.


r/TamilBooks • • 4d ago

Done with Book Fair this year

Post image
31 Upvotes

r/TamilBooks • • 4d ago

Suggest me nice tamizh books to read makkale

3 Upvotes

Genre ethuvenalum okay than(horror thavirthu) aprom beginner friendly ah irukkanum.. easy ah purinjikra mathri ena Enakku tamil aragoraya padikka varum aprom textbook tamil illana thuya tamizh perusa varathu.. Athuku etha mathri books sollunga paa aprom bayangra interesting ah irukanum..

Etho oru dhadava Perumal Murugan oda translated book padichen "Pyre" nu soltu, tamizh peru theriyathu.. antha mathri books tha neraya theditiruken


r/TamilBooks • • 4d ago

வேலைக்காரனுக்கு கிடைத்த தேவலோகப் பெண்! 😲 | மாயக்குளத்தின் அதிசயம் | தமிழ...

Thumbnail
youtube.com
3 Upvotes

Tamil stories, Tamil kadhaigal, Tamil folklore stories, Tamil fantasy stories, Tamil moral stories, Tamil bedtime stories, Tamil fairy tales, Tamil village stories, Indian folklore, ancient Indian stories, magical pond story, celestial woman story, Tamil storytelling, Tamil story narration, Tamil animated stories, Tamil cartoon stories, Tamil mythological stories, Raja Rani stories, Tamil culture, Thigil Marmam, திகில் மர்மம், தமிழ் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தேவலோகப் பெண், மாயக்குளம்


r/TamilBooks • • 4d ago

Today's Reading Sessions

Thumbnail gallery
9 Upvotes