r/kanyakumari • • 11h ago

மண்டைக்காடு அருகே சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் – டிரைவர் உட்பட இருவர் கைது!

Post image
8 Upvotes

மண்டைக்காடு அருகே சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் – டிரைவர் உட்பட இருவர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு இளைஞர் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மண்டைக்காடு போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arukanimembers Team – குமரி மாவட்டச் செய்திகள்


r/kanyakumari • • 20h ago

Ask KK Is there anyone travelling from nagercoil to chennai in the upcoming weeks?

3 Upvotes

I would be really grateful if someone is out there travelling. I urgently need my parcel from nagercoil. Delhivery delayed it :((
Please let me know if anyone is travelling.


r/kanyakumari • • 11h ago

தாழக்குடியில் விலை உயர்ந்த சொகுசு காரின் கண்ணாடிகள் உடைப்பு – மர்ம நபர்களைத் தேடும் போலீசார்!

Thumbnail gallery
2 Upvotes

தாழக்குடியில் விலை உயர்ந்த சொகுசு காரின் கண்ணாடிகள் உடைப்பு – மர்ம நபர்களைத் தேடும் போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனமங்கலம் பகுதியில் இருந்து தாழக்குடி ஊர் நோக்கிச் செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நான்கு சக்கர சொகுசு வாகனத்தின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தால் வாகன உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.