r/tamil • • Aug 27 '26

அறிவிப்பு (Announcement) My மச்சான் built a VIDEO GAME that teaches you Tamil 🎮

Thumbnail
kinureader.com
16 Upvotes

r/tamil • • 8d ago

Trying to improve your Tamil? My மச்சான் built a free app for reading stories 📚

Thumbnail
kinureader.com
3 Upvotes

r/tamil • • 42m ago

What are some of the iconic songs that represent the Marudham Thinai in Sangam Literature?

2 Upvotes

I am writing a script based on Marudham lands. Especially centered in Trichy aka ThiruChiraPalli aka Trichinopoly. Its a fascinating place with the 3rd largest temple complex in the world i guess Sri Rangam, which is also an island in a river, the oldest stone dam (this still functions), the start of the Kaveri Delta, etc etc.

I would love to know more about songs of this land. How did it look in the old days? Whats Marudham in general?


r/tamil • • 4h ago

கட்டுரை (Article) சரி...

0 Upvotes

அவள் என்னைத் திட்டும்போது

சுருங்கும் புருவம்,

நகையாடும்போது

கன்னத்தில் விழும் குழி.

இதைப் பார்க்கத்தான்

நான் அடிக்கடி தப்பு செய்கிறேன்.

அவள் திட்டிய பிறகு நான் சொல்வது

ஒரே ஒரு சொல்:

"சரி, அழகம்மா."


r/tamil • • 8h ago

கட்டுரை (Article) On the violence in the Kalingatthuparani

Thumbnail
reddit.com
1 Upvotes

r/tamil • • 1d ago

கட்டுரை (Article) முற்றும் மோனை காதல் கவிதை

1 Upvotes

மூச்சில் முளைத்து முகத்தில் முத்தமிட்டு முகவரியை முற்றுகையிட்டாள் முல்லையவள்.


r/tamil • • 1d ago

கட்டுரை (Article) இதய கவசம்

0 Upvotes

காற்றடித்தும்

என் மூச்சு

அவள் பக்கமிருந்தும்

செல்லவில்லை அவளிடம்

ஏனோ

அவள் இதய கவசத்தை

இரக்கினால் நான்

இதயத்தை

நிரப்பிடுவேன் என்ற

பயமோ


r/tamil • • 1d ago

கேள்வி (Question) முகம் ith tamizh aa sanskrit aa??

2 Upvotes

Please ith sanskrit nu yaarum sollathinga enakae oru nimisham thonuth namma tamil language le naraya sanskrit words iruk but Sanskrit le not even 10 words that has tamil root then how tamil will have sanskrit words please etho tamil eluthukala nammale thaaraivaarthu kudukurath pola irukuthu...tamil language le front side ae kurikurae ella words un மு le tha thodanguth then how mugam can be sanskrit why not it be a tamil for example in tamilnadu we say shop as கடை but in malayalam they shop as kada so is that mean that's kadai is orginated from malayalam word kada or sanskrit word kada even if internet shows kada which is the root for tamil word kadai tamil peoples will tell yes tamil word kadai came from kada I mean hypothetically solren athu illama evlovo pazhamaya vechrika namma mozhi ku oru basic daily word mugam nu oru word irukatha??


r/tamil • • 2d ago

கட்டுரை (Article) பாவச்செயல்

0 Upvotes

காதலிக்கப்பட்டேன்

என்பதே இங்கே

மனிதனுக்கு

ஊட்டப்பட்ட மிகப்பெரிய

பாவச்செயல்


r/tamil • • 2d ago

கட்டுரை (Article) சிறுகதை - வஸ்து

2 Upvotes

அன்று இரவு பௌர்ணமியாக இருந்தாலும் மேகங்கள் மூடியிருந்ததால் வானம் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பியிருந்தது. வீதி விளக்கின் தயவுடன் இரண்டு இளைஞர்கள் தங்கள் இருப்பிடம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“நவீனு, இன்னைக்கு பொட்டனம் போடறோம்.”

“போட்டறளாங்கரியா.”

“இப்ப போடாம எந்த வயசுல போடறது. பணம் சேர்த்திட்டல்ல.”

“இல்லடா, ஜனா. அதுக்குனு சேர்த்து வச்சதுல கொஞ்சம் குறையுது.”

“பணம் இல்லாம வஸ்து தரமாட்டாங்கடா. வேற பணம் இல்லையா?”

“அப்பா அடுத்த மாசம் மெஸ் பீசுக்கு கொடுத்த பணம் இருக்கு!”

“அப்பறென்ன! அதை எடுத்துரு. நானே காலேஜ் பீசுக்கு வச்சிருக்கிற பணத்தில தான் எடுக்கப்போறேன்.”

“அடப்பாவி!”

“விடுடா! அதான் இப்ப சூப்பர் மார்க்கெட்ல பார்ட் டைம்மா வேலைக்கு சேர்த்திருக்கோமே! அந்த பணத்தை வச்சு சமாளிச்சுக்கலாம்.”

“சரியா வருமா.”

“வரும்டா.”

அவர்கள் பேசிக்கொண்டே ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

“பத்து மணிக்கு, நம்ம திவாகர் அவனோட பிரண்டோட கார் எடுத்துட்டு இங்கே வறேனு சொன்னான். அவனோடவே போயிக்கலாம். ஹ ஹ அதுதான் சேஃப்.”

“அப்படியா !  இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வேலை பார்த்திட்டு வந்ததில ரொம்ப அசதியா இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன்”.

“டேய்! அப்படியே தூங்கிடாத.”

“சரிடா. ஒருவேளை தூங்கிட்டா எழுப்பு.”

“சரி, நான் போன் பேசிட்டு வந்திடறேன்.” என்று சொல்லி கைபேசியை எடுத்தபடியே வெளியே நின்றுவிட்டான். ஜனா.

நவீன், அறையைத் திறந்து உள்ளே சென்று, மேஜேயில் இருந்த திருவள்ளுவர் படத்திற்கு அருகே தன் கைபேசியை வைத்துவிட்டு, “அப்பாடா” என்ற படியே படுக்கையில் படுத்தான்.

சிறிது நேரம் கழித்து, “நவீனு எழுந்திரிடா வஸ்து வாங்க போலாம். திவாகர் வந்திட்டான். சீக்கிரம்” என எழுப்பினான் ஜனா.

அறக்கப் பறக்க எழுந்து கிளம்பி போனை எடுக்கச் சென்றான். திருவள்ளுவர் படத்திற்கு அடியே தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்னும் குரல் எழுதியிருந்ததைப் பார்த்தான்.

பிறகு திரும்பி “ஜனா, வஸ்து தப்பில்லையா?”

“நவீனு, எப்பாவது ஒரு தடவை பண்ணா தப்பில்லை. தொடர்ந்து பண்ணாத்தான் தப்பு. பார்த்துக்கலாம் வாடா. மறக்காம பணத்தை எடுத்துக்கோ.”

“ம்ம்.”

இருவரும் அவசரமாகவும் அலாதியான பிரியத்துடனும் சற்றே பயத்துடனும் திவாகரின் காரில் ஏறினார்கள்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மாடிக்கட்டிட காலணிக்கு அருகே மரத்திற்கு அடியே சென்று கார் நின்றது. தொலைவில் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் லைட்டை அவர்களின் காருக்கு எதிர்புறமாக அடித்தபடி நின்றது. அவன் தன் தலைக்கவசத்தை கழட்டாமல் நின்றபடி, லைட்டில் டிம்மு டிப்பு அடித்தான்.

“அவன்தானு நினைக்கிறேன். காசை கொடுடா.” என்றான் ஜனா.

“இந்தாடா...” என நவீன் தன் காசை அவனிடத்தே கொடுக்கும் போது அப்பாவின் முகம் வந்து போனது.

நவீன் மட்டும் காருக்குள்ளே கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருக்க, ஜனாவும் திவகாரும் அந்த வண்டிக்காரனிடம் சென்று ஏதோ பேசி பணத்தை கொடுக்க, அவன் சிறிய பொட்டலத்தை கொடுத்தான். அதை சட்டென்று வாங்கி தன் சட்டை பாக்கெட்டுக்குள் போட்டு விட்டு, பத்து வினாடியில் பல்லைக் காட்டியபடி “கிடைச்சிருச்சு...” என்று உற்சாக கூச்சலுடன் காருக்குள் வந்தான் ஜனா.

அடுத்த வினாடியில் திவாகரும் வந்து காரை விருட்டென்று எடுத்தான்.

“டேய் காட்டு, பார்க்கலாம்.” என்றான் நவீன்.

“இரு.” என்றபடி பொட்டனத்தை எடுத்துப் பிரித்தான். அதை பார்த்தவுடனே, பயமும் சந்தோசமும் பொங்கிக் கொண்டு வந்தன அவர்களுக்கு.

“நவீனு, இப்பவே போட்டறலாம் டா.”

“டேய், ரூம்முக்குப் போய் போட்டுக்கலாம் டா.”

“டேய், அங்க போன, வாசனை அடிச்சா. எல்லாருக்கும் தெரிஞ்சுபோயிடும். அப்புறம் பங்குக்கு வருவானுங்கடா.”

“டேய், வெளியில போலிஸ் கீது பார்த்திட்டா?”

“அதெல்லாம் பார்க்கமாட்டாங்கடா. நீ பயந்து சாவாத. டேய் திவாகர் உனக்கு ஓகே தானா.”

“எனக்கு டபுள் ஓகே.”

“அப்ப! யாரும் வராத இடமா பார்த்து வண்டிய ஓரங்கட்டு.”

அவன் சொன்னது போலவே, அடுக்கு மாடி வீடு குடியிருப்பின் ஒரு புறத்தில் அமைந்திருந்த ஆள் நடமாட்டம் இல்லாத காலி மனைப்பகுதிகளுக்கு அருகே வண்டியை அவசரமாக நிறுத்தினான்.

அடுத்த சில நிமிசத்தில் காருக்குள்ளே புகை மண்டலம் சூழ்ந்தது. அவர்களுக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது.

“டேய் நவீனு, இந்த மாதிரி தினமும் அடிக்கணும்.”

“தினமும் அடிக்க காசில்லையே மச்சி.”

“அதான், நாம்ப சூப்பர் மார்க்கெட்ல சேர்ந்திருக்கோம்ல.”

“தினமும் எப்படிடா பணம் தருவாங்க.  கல்லாலலையா கைவக்க முடியும்.”

“நவீனு, சூப்பரான யோசனைடா. கல்லாவுல கை வச்சிருவோம்.”

“அடப்பாவி!”

“மாட்டிக்கிட்டா. சங்கு.”

“சங்கப் பார்க்காதா சரக்கப்பாருடா.”

“சரி, அந்த காசும் பத்தலனா?”

“அப்ப காசை திவா தருவான். இல்லை மச்சி.”

“கண்டிப்பா. இந்த காரை வித்தாவது அடிக்கலாம்டா.”

“திவா மாதிரி. பாசிட்டிவா பேசுடா.”

“டேய், திவா இது உன்னோட காராடா.. சொல்லவேயில்லை.”

“இல்லை. என் நண்பனோட காரு.”

“அப்புறம் எப்படிடா..”

“ஆமால்ல. அப்ப அவனை வித்தாவது நம்ப அடிப்போம்டா.”

“சூப்பர் சூப்பர் மச்சி. எப்படி நம்ப பைய, அதான் திவா. என் நண்பன்டா..” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும் குடியிருப்புக்கும் அவர்களின் காருக்கும் இடையே வந்து நின்றனர். “இங்கேயே எதுக்கு நிறுத்த சொன்ன, இன்னும் கொஞ்ச தூரம் போய் இறக்கி விட்டிருப்பேன்ல.” என்றான் அவன்.

“வேண்டாம். தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா அப்போ பிரச்சனையாயிரும்.”

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த நவீன், “டேய் மச்சி, அவளைப் பார்த்தால், என்னோட எக்ஸ் கோகிலா மாதிரியே இருக்குடா.” என்றான் உணர்ச்சி வசத்துடன்.

ஜனா கண்களை தேய்த்து உற்றுப் பார்த்துவிட்டு, “இல்லைடா, அது வேறயாரோ! அவதான் உனக்கு டிமிக்கி கொடுத்துட்டு வேற ஊருக்குப் போயிட்டாளே! அவளா இருக்காது.” என்றான்.

“இல்லை மச்சி, அவதான். என்னை வெறுப்பேத்ததான் இப்படி எவன்கூடவே வந்து நிக்கிறா.” என்று கண்களை கசக்கியபடியே அழுதான்.

“பீலிங்கஸ் ஆவாத, இங்க வா. நண்பன் நானிருக்கேன்ல” என்று அவனோடு தோளில் கைபோடச் சென்றவனை, கையை விலக்கிவிட்டான்.

“இப்ப அவளை என்ன பண்ணப்போறேன்பாரு!” என்று கதவை திறந்து கொண்டு தள்ளாடியபடியே அவர்களிடம் சென்றான். “போகாதே, போகாதே” என்று எத்தனை முறை ஜனா கூப்பிட்டும் கேட்கவில்லை.

“ஏய், கோகிலா, இங்க எவன் கூடடி சுத்திகிட்டு இருக்கிற” என்றான்.

“ஹலோ, இவங்க பேரு கோகிலா இல்ல.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “ நீ சீக்கிரம் கிளம்பு.” என்றான் அந்த இளைஞன் அந்த பெண்ணிடத்தில்.

“பேர, மாத்தி சொன்னா. எங்களுக்குத் தெரியாதா? இவ கோகிலா தான்.” என்றான் நவீன்.

“இவன் யாருனு உனக்குத் தெரியுமா?” என்றான் அந்த இளைஞன் அவளிடத்தே.

“டேய், இவன் தான் ஏதோ போதையை போட்டு லூசு மாதிரி உலறிட்டு இருக்கிறான். அவன் சொல்றானு நீ கேட்டுட்டு இருக்கிற. நீ நாளைக்கு வா உன்ன வச்சிக்கிறேன்.”

“அடிப்பாவி, என் முன்னாடியே அவனை வச்சிக்கிறேனு சொல்றியா. உன்னை” என்று அவள் கையைப் பிடிக்கச் சென்றான்.

உடனே அந்த இளைஞன், அவனைத் தள்ளிவிட, தடுமாறி கீழே விழுந்தான். பின்னர், திரும்பி அப்பெண்ணிடம், “நீ சீக்கிரம் கிளம்பு.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவன் காதில் பலார் என்று ஒரு அரையை விட்டான் ஜனா. அந்த இளைஞன் அப்படியே தடுமாறி கீழே விழுந்தான். “என் நண்பனை தள்ளி விடறயா” என்றான்.

உடனே அந்த பெண், “சதீஸ், சதீஸ், உனக்கு ஒன்னும் ஆகலையே!.” என்று கீழே விழுத்தவனை தூக்கிவிடச் சென்றாள்.

“நான் கீழே விழுந்து கிடக்கறேன். என்னை தூக்காம அவனைத் தூக்க வரியா.” என்று வேகமாக எழுந்து அவள் தலையைப் பிடித்து இழுத்தான் நவீன்.

கீழே கிடந்த இளைஞன் நவீனின் காலைப் பிடித்து இழுக்க மீண்டும் கீழே விழுந்து மண்ணைக் கவ்வினான். அந்த பெண்ணும் அவன் இழுத்ததால் கீழே விழுந்தாள்.

“என் நண்பனை மறுபடியும் கீழே தள்ளுறியா” என்று சொன்னபடி, அந்த இளைஞனை வயிற்றில் எட்டி எட்டி மிதித்தான் ஜனா. அந்த இளைஞனும் அவனது ஊன்றிக் கொண்டிருந்த காலை உதைக்க, அவனும் தடுமாறி கீழே விழுந்தான்.

காருக்குள் இருந்து திவாகர், பேம் பேம்னு ஆரன் அடித்து, தலையை வெளியே நீட்டியபடி, “வாங்கடா சீக்கிரம்” என்றான் எதிரே வரும் வண்டியைப் பார்த்தபடி.

நீலம் சிவப்பு விளக்குகள் ஒளிர போலிஸ் ரோந்து வாகனம் வந்து கொண்டிருந்தது. உடனே, நவீனும் ஜனாவும் அவசரமாக எழுந்து அவர்களின் வண்டியை நோக்கி ஓடினார்கள். “உங்க இரண்டு பேரையும் இன்னொரு நாள் வச்சிக்கறேன்.” என்று கத்திவிட்டு காருக்குள் ஏறி உட்கார்ந்து “கிளம்புடா” என்றான் நவீன். ஜனாவும் வந்து அமர்ந்து கொண்டு, “சீக்கிரம்” என்றான். திவாகர் வண்டியை அலசியபடியே திருப்பினான்.

போலிஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய காவலர்கள், கீழே கிடந்தவர்களை தூக்கி விட்டனர்.

திவாகர் காரை படுவேகமாக செலுத்தினான். நவீனும், ஜனாவும் அவ்வப்போது பின்னால் திரும்பி போலிஸ் வாகனம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு, “சீக்கிரம் சீக்கிரம்.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகள் படபடத்தது, வியர்வை ஊற்றித் தள்ளியது.

பின்னால், போலிஸ் சைரன் அடித்தபடியே நீல சிவப்பு ஒளியை அடித்துக் கொண்டு வாகனம் வருவதைப் பார்த்தவுடனே, உடல் நடுங்கியது அவர்களுக்கு. “சீக்கிரம் போடா திவா.” என்று கத்தினார்கள்.

திவாகர், தன் கண்களை சுருக்கி உற்றுப் பார்த்தபடியே வண்டியை ஓட்டிகொண்டிருக்க, எதிரே ஹைபீம் போட்டுக்கொண்டு ஒரு வாகனம் வரவே, அவன் கண்கள் கூச, லேசாக இடது புறம் திருப்ப, புளியமரத்தை நோக்கி வண்டி பாய்ந்தது.

 

உ மணிகண்டன்


r/tamil • • 3d ago

want to learn tamil and tamil culture

9 Upvotes

Hey everyone, im from North India and my girlfriend is Tamil. she doesn't expect me to learn her language but i'd genuinely love to do it for her. iwant to start with the basics and eventually be able to have proper conversations .... apart from the language i'd also love to learn more about history, culture, traditions and literature. i have no idea where to begin so i'd love some recommendations for YouTube channels, books, apps or any other resources that could help me get started.would really appreciate any suggestions


r/tamil • • 2d ago

கட்டுரை (Article) ஒரு தலை

0 Upvotes

எனக்கானவள் அவள்தான்

ஆனால் அவள் எனக்கில்லை


r/tamil • • 3d ago

வெள்ளப்பெருக்கு காரணமாக அழிந்த பழைய குமரிக் கண்டம், தமிழ் நாகரிகம்,தமிழ் வரலாறு, மறைந்த தமிழ்த் தொன்மை, வெள்ளப்பெருக்கு, சங்க இலக்கியம், தமிழர்களின் தொன்மை, மரபு, வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான தகவல்களை எளிய முறையில் பகிர்கிறோம்.தற்கபூர்வமாக ஆரோக்கியமாக காய்தல் உவப்பு இன்றி விவாதிப்போம் வாருங்கள்..

3 Upvotes

kumari kandam "the lost continent of Lemuria"


r/tamil • • 3d ago

கட்டுரை (Article) ஆசை

1 Upvotes

இந்த ஆயுள் போதும்...

மீண்டும் பிறக்க வேண்டாமென

இருந்தவனுக்கு,

அடுத்த ஆயுளிலாவது

ஒன்றாக இருக்க வேண்டும்

என்ற ஆசையைத் தந்தவள்...

என் அழகி!


r/tamil • • 3d ago

மற்றது (Other) உயிர்ப் பித்து

3 Upvotes

அவளை உயிராய் நேசித்தேன்—வெறி பிடித்தவன் போல்!

அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும்

என் செவிகளில் இன்னும் ரீங்காரமாய் கேட்கிறது;

அவள் தீண்டிய அந்தப் பொன்னான கணங்கள்

என் இதயத்தில் ஆழமாய் பதிந்து கிடக்கின்றன.

இன்றோ...

அவள் பிரிவின் தவிப்பில்

உண்மையிலேயே பித்துப் பிடித்தவனாய்

நிற்கிறேன் தெருக்கோடியில்!

கண்களை மூடினால் அவள் சிரித்த முகம்,

திறந்தால் அவளற்ற வெறுமையான உலகம்!

இரவின் மடியில் அவள் நினைவுகள் கைகளில் ஏந்தும்போது,

கண்ணீர் மட்டும் தான் எனக்குத் துணையாகிறது.

இந்த உலகம் என்னை 'பைத்தியம்' என்கிறது,

அவர்களுக்குத் தெரியவில்லை

நான் நேசித்த காதலின் ஆழமும்,

என் காதலி பிரிந்த வலியின் வேதனையும்!


r/tamil • • 3d ago

கட்டுரை (Article) முற்றும் மோனை கவிதை

2 Upvotes

அழகு ஆண்மையா, அறிவு ஆண்மையா?

ஆவேசம் ஆண்மையா, அன்பு ஆண்மையா?

அதிகாரம் ஆண்மையா, அரவணைப்பு ஆண்மையா?

அழகும், ஆவேசமும் அதிகாரமும் அறிவிலா ஆண்கள் அறிந்து

அளித்த ஆண்மை ஆயினும், அறிவும், அன்பும், அரவணைப்புமே

ஆண்டவன் அள்ளி அளித்த அசல் ஆண்மையாகும்.


r/tamil • • 3d ago

Beutiful Tamil word guys

2 Upvotes

r/tamil • • 3d ago

கலந்துரையாடல் (Discussion) Suggest me nice tamizh books to read makkale

3 Upvotes

Genre ethuvenalum okay than(horror thavirthu) aprom beginner friendly ah irukkanum.. easy ah purinjikra mathri ena Enakku tamil aragoraya padikka varum aprom textbook tamil illana thuya tamizh perusa varathu.. Athuku etha mathri books sollunga paa aprom bayangra interesting ah irukanum..

Etho oru dhadava Perumal Murugan oda translated book padichen "Pyre" nu soltu, tamizh peru theriyathu.. antha mathri books tha neraya theditiruken


r/tamil • • 4d ago

கேள்வி (Question) Tamil Gamers

15 Upvotes

Hi! I am currently developing a video game and am considering adapting it into Tamil. However, I would like to know whether Tamil speakers would actually play a game in their own language, or if they find it more natural to play games in English or another regional language. Thank you very much!


r/tamil • • 4d ago

I was watching one tamil movie someone please translate this for me

Post image
55 Upvotes

r/tamil • • 4d ago

மற்றது (Other) Tamil ppl from Mumbai

1 Upvotes

Hi yaaravuthu tamil makkal irrukingala from Mumbai or navi mumbai ...


r/tamil • • 4d ago

கட்டுரை (Article) சுபாவம்

0 Upvotes

பெண்கள் கோடி,

அவர்கள் சுபாவங்களும் கோடி.

எந்தச் சுபாவத்தைக் கண்டேனோ,

இந்தச் சுபா

எனக்கானவள் எனக் கண்டேன்.